ஸ்பெயின் சென்றடைந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (27-1-2024) இரவு சென்னையில் இருந்து ஸ்பெயின் புறப்பட்டார்.

இன்று ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் சென்றடைந்த முதலமைச்சருக்கு ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் மற்றும் தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை அங்குள்ள தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்க உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை குறித்து எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளார்.

8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்…