சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஸ்பெயின் புறப்பட்டார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தும் இலக்குடன் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

இதனையடுத்து முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

“8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். பிப்ரவரி 7 ம் தேதி காலை சென்னை திரும்புகிறேன்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.