சென்னை,
வார்தா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் இன்று சென்னை வந்துள்ளனர். தற்போது முதல்வர் பன்னீர் செல்வத்துடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கடந்த கடந்த 12-ந் தேதி சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களை புரட்டி போட்ட வார்தா புயல்ல்  ன்னை  மற்றும் அதன்  புறநகர் பகுதிகள் கடுமையாக சேதமடைந்தது.
ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்தன. நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள்  பாதிப்புக்கு உள்ளாகின.  புயலால் தமிழகம் கடுமையான சேதத்துக்கு உள்ளாகி உள்ளதாகவும், அதற்கு மத்திய அரசு நிவாரணம் தர வேண்டும் என்று கோரி தமிழக முதல்வர் டில்லி சென்று பிரதமரை சந்தித்து  கோரிக்கை மனுவை அளித்தார்.
அதையடுத்து, தமிழக புயல்  சேத பகுதிகளைப் பார்வையிட மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிரவீன் வசிஷ்டா தலைமையில் வரும் 9 பேர் கொண்ட  குழுவை மத்திய அரசு அமைத்தது.
மத்தியகுழுவினர் இன்று சென்னை வந்தனர். தற்போது சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆலோசனையில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு, புயல் சேதம் குறித்த விவரங்களை  மத்திய குழு வினருக்கு விளக்கி வருகின்றனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்ததும், மத்திய குழுவினர்  புயல் பாதித்த பகுதிகளையும், சேத விவரங்களையும்  நேரில் சென்று  ஆய்வு நடத்த உள்ளனர்.
மத்திய குழு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம்  மாவட்டங்கள் மட்டுமல்லாமல் திருவண்ணா மலை, வேலூர், தர்மபுரி மாவட்டங்களிலும்  புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தும் என தெரிகிறது.