லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் 2வது கட்ட வாக்குப்பதிவு 14ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளதால், தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதுபோல கோவா, உத்தரகாண்ட்  மாநிலத்திலும் 14ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அங்கும் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.

உ.பி. 2வது கட்ட தேர்தல்

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபை 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள உ.பி. போராடிக்கொண்டிருக்கிறது. ஆட்சியை கைப்பற்ற பிரியங்கா காந்தி தலைமையில்  காங்கிரஸ் கட்சி ஒருபுறமும், அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி மற்றொருபுறமும் நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியில் மற்ற கட்சிகளுக்கு போட்டியாக டஃப் கொடுத்துக்கொண்டிருக்கிறது. மேலும் ஓவைசியின் கட்சியும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போட்டியிடுகிறது. இதனால், அங்கு வாக்குகள் பிரியும் சூழல் உள்ளது. மேலும் 4 முனை போட்டி நடைபெறுகிறது. இதனால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உ.பி.யில் ஏற்கனவே முதல்கட்ட தேர்தல் கடந்த 10-ம் தேதி முடிவடைந்தது. அன்றைய தினம் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. இத்தேர்தலில் சுமார் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதையடுத்து 2வது கட்ட தேர்தல் 9 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில்  வரும் 14ந்தேதி (நாளை மறுதினம்) நடைபெற உள்ளது.55 தொகுதிகளில்  584 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  இதற்காக கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த பரப்புரை இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது.  வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படுத்த மாநில காவல் துறையினருடன் துணை ராணுவப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவா சட்டமன்ற தேர்தல்

கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி (நாளை மறுதினம்) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.

உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தல்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள  70 சட்டசபை தொகுதிகளுக்கும்  நாளை மறுதினம் (14ந்தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.