புதுடெல்லி:
மாநிலங்களவை தேர்தலில் இன்று வாக்குபதிவு நடைபெற உள்ளது.

மாநிலங்களவையில் காலியாக உள்ள 57 இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

11 மாநிலங்களில் காலியாக உள்ள மொத்தம் 57 இடங்களில் 41 இடங்களில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வாகியுள்ளனர்.
கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான், மகாரஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கு இன்று தேர்தல் நடக்க உள்ளது. அதாவது, ஹரியானா -4, கர்நாடகா – 4, மகாரஷ்டிரா – 6, ராஜஸ்தான் – 4 இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.