சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளில் தமிழ்நாட்டில் காலை 7மணி முதல் மாலை 6மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தல் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அரசாணையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தலையொட்டி, இன்று (மார்ச் 20, 2024) வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27. அதையடுத்து மார்ச் 28ந்தேதி வேட்புமனு பரிசீலனையும், வேட்புமனு வாபஸ் பெற கடைசிநாள் மார்ச் 30ந்தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இநத் நிலையில், ஏப்ரல் 19 – காலை 7ல் இருந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு என்றும், முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வது தொடர்பாகவும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.