வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நவம்பர் 18ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு! மாநில தேர்தல் ஆணையம்

Must read

சென்னை:

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நவம்பர் 18ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்டமாக திருத்தம் செய்ய  செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக அறிவித்திருந்தது. பின்னர், அதை சென்னை நவம்பர் 10 ஆம் தேதி வரை  நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், தற்போது, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி முழுவதுமாக முடிவடையாத நிலையில், நவம்பர் 18ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்குள் தேவைப்படுவோர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம், இடம் மாற்றம் போன்றவற்றை  மேற்கொள்ளலாம் என்று கூறி உள்ளது.

அத்துடன்,  வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் தான் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று கூறி உள்ளது.

More articles

Latest article