யாருக்கு ஓட்டு? :  சகாயம் அட்வைஸ்

Must read

 
a
சென்னை:
பணம், பரிசு பொருள் வாங்கிக்கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று வாக்காளர்களுக்கு சகாயம் ஐ.ஏ.எஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய சகாயம், “நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள், சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு பொது நல நோக்கோடு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.  பணம் பரிசு வாங்கிக்கொண்டு வாக்களிக்க நினைக்கக்கூடாது” என்றார்.
மேலும் அவர், “ தேர்தலை நேர்மையாக நடத்த, சிறப்பான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது” என்றார்.

More articles

Latest article