கொழும்பு

டந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி  தொடங்கி உள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள 225 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 7,452 பேர் போட்டி இட்டனர்.

இந்த தேர்தலில் மும்முனை போட்டி உள்ளது.

மகிந்த ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, சஜித் பிரமதசாவின் ஐக்கிய மக்கள் கட்சி ஆகியவை போட்டி இடுகின்றன.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் சுமார் 28 லட்சம் பேர் யாருக்கு வாக்களிப்பது என தெரியவில்லை எனக் கூறி இருந்தனர்.

அநேகமாக அவர்களின் வாக்கு தேர்தல் முடிவில் முக்கிய இடம் பெறும் என கூறப்படுகிற்து.

தேர்தலில் 71% வாக்குகள் பதிவாகின.

இன்று காலை 66 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி உள்ளது.