அஜ்மான்:
க்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட் ஒன்றில் பயங்கர தீ விபத்து நடந்தது.

லெபனானில் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்து சிதறியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் வளைகுடா நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அமீரக எமிரேட்சின் அஜ்மான் என்ற தொழில் நகரில் உள்ள பிரமாண்ட காய்கனி, பழங்கள் விற்பனை செய்யும் மார்க்கெட்டில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து சம்பம் நடந்தது. தீயினால் ஏற்பட்ட கரும்புகை பல அடி உயரத்திற்கு கிளம்பியதால் அருகே இருந்த வானுயர கட்டங்கள் கரும்புகையால் சூழப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.