சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள சுற்றுக்களில் திமுக – 151 இடங்களிலும், அதிமுக – 82 இடங்களிலும், மநீம – 1 இடத்திலும் வெற்றிபெறும் சூழல் உருவாகி உள்ளது.

டிடிவி தினகரனின் அமமுக, தேமுதிக, உள்பட பல கட்சிகள் முற்றிலுமாக மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி வெற்றிபெறாவிட்டாலும், பெரும்பாலான தொகுதிகளிலும் 3வது இடத்தை பிடித்துள்ளது. அதிமுக, திமுகவுக்கு மாற்றுக்கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்து வருவது வாக்கு எண்ணிக்கையில் மூலம் தெரிய வந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel