சென்னை:  தமிழ்நாடு  கவர்னர் அர்லேகருடன் தவெக தலைவர் விஜய் இனறு மீண்டும் சந்தித்து பேசினார். அப்போது, ஆட்சி அமைக்க  அழைக்க வேண்டும் என  மீண்டும் உரிமை கோரினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அக்கட்சிக்கு இல்லாததால், ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், விஜய்க்கு, கடந்த மூன்று நாட்களாக  வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வசதிகள் திரும்ப பெறப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் தவெகவுக்கு வேறு எந்தவொரு கட்சியும் ஆதரவு அளிக்க முன்வராத நிலையில், தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள த.வெ.க ஆட்சியமைப்பதில் சிக்கல் தொடர்கிறது. இந்த நிலையில், தவெக ஆட்சிக்கு முதல் 6 மாதங்கள்  தி.மு.க இடையூறு செய்யாது என தி.மு.க தலைவர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில்,  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று இரண்டாவது நாளாக ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி அமைக்க இதுவரை ஆளுநர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படாத சூழலில், விஜய் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆளுநரைச் சந்தித்து தங்களது பலத்தை நிரூபிக்க உரிமை கோரியுள்ளனர்.

இதற்கு ஆளுநர் அனுமதி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]