ஐபிஎல்-2019 போட்டிக்கான முழு அட்டவணை: பிசிசிஐ வெளியீடு…

Must read

மும்பை: 

ரும் 23ந்தேதி சென்னையில் தொடங்க உள்ள 2019-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகளின் முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் நாளை மறுதினம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஆட்டம் பாட்டம்  கொண்டாட்டம் இல்லாமல் போட்டிகள் நடைபெற உள்ளன.

17 போட்டிகள் அடங்கிய 2019-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ கடந்த மாதம் வெளியிட்டது. மீதி போட்டிகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது போட்டிகளின்  முழு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த போட்டியில் உலக கிரிக்கெட் அணிகளில் உள்ள பல வீரர்கள் கலந்துகொண்டு விளையாடு கின்றனர். இதற்கான வீரர்களின் ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையுடன் பெங்களூரு அணி முதல் போட்டியில் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:-

மார்ச் 23, சனிக்கிழமை –  சென்னை சூப்பர் கிங்ஸ் / ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – நேரம் இரவு 8 மணி

மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் / சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மாலை 4 மணி. மும்பை இந்தியன்ஸ் / டெல்லி கேப்பிடல்ஸ் – இரவு 8 மணி.

மார்ச் 25: திங்கட்கிழமை: ராஜஸ்தான் ராயல்ஸ் / கிங்ஸ் லெவன் பஞ்சாப் – இரவு  8 மணி

மார்ச் 26: செவ்வாய்க்கிழமை: டெல்லி கேப்பிடல்ஸ் / சென்னை சூப்பர் கிங்ஸ் – இரவு 8 மணி

மார்ச் 27: புதன்கிழமை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் / கிங்ஸ் லெவன் பஞ்சாப் – இரவு 8 மணி

மார்ச் 28, வியாழக்கிழமை: ராயல் சேலஞ்சர்ஸ் / மும்பை இந்தியன்ஸ் – இரவு 8 மணி.

மார்ச் 29, வெள்ளி: சன் ரைசர்ஸ் / ராஜஸ்தான் ராயல்ஸ் – இரவு 8 மணி.

மார்ச் 30, சனிக்கிழமை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் / மும்பை இந்தியன்ஸ் – மாலை 4 மணி
டெல்லி கேப்பிடல்ஸ் / கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – இரவு 8 மணி

மார்ச் 31, ஞாயிற்றுக்கிழமை: சன் ரைசர்ஸ் / ஆர்சிபி – மாலை 4 மணி சென்னை  சூப்பர் கிங்ஸ் / ராஜஸ்தான் ராயல்ஸ் – இரவு 8 மணி

ஏப்ரல் 1, திங்கட் கிழமை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் / டெல்லி கேப்பிடல்ஸ் – இரவு 8 மணி

ஏப்ரல் 2, செவ்வாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் / ஆர்சிபி. – இரவு 8 மணி

ஏப்ரல் 3, புதன்: மும்பை இந்தியன்ஸ் / சென்னை சூப்பர் கிங்ஸ்- வான்கடே – இரவு 8 மணி

ஏப்ரல் 4, வியாழன்: டெல்லி கேப்பிடல்ஸ் / சன் ரைசர்ஸ் – இரவு 8 மணி

ஏப்ரல் 5, வெள்ளிக்கிழமை: ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு / கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – இரவு 8 மணி

ஏப்ரல் 6, சனிக்கிழமை: சிஎஸ்கே / பஞ்சாப்  – மாலை 4 மணி ஹைதராபாத் / மும்பை – இரவு 8 மணி

ஏப்ரல் 7, ஞாயிற்றுக்கிழமை: ஆர்சிபி / டெல்லி கேப்பிடல்ஸ்- மாலை 4 மணி ராஜஸ்தான் / கொல்கத்தா – இரவு 8 மணி

ஏப்ரல் 8, திங்கட் கிழமை: பஞ்சாப் / ஹைதராபாத் – இரவு 8 மணி

ஏப்ரல் 9, செவ்வாய்: சிஎஸ்கே / கேகேஆர். – இரவு 8 மணி

ஏப்ரல் 10, புதன்: மும்பை இந்தியன்ஸ் / கிங்ஸ் லெவன் பஞ்சாப் – இரவு 8 மணி

ஏப்ரல் 11, வியாழன்: சென்னை சூப்பர் கிங்ஸ் / ராஜஸ்தான் ராயல்ஸ் – இரவு 8 மணி

ஏப்ரல் 12 வெள்ளி: கொல்கத்தா / டெல்லி – இரவு 8 மணி

ஏப்ரல் 13, சனிக்கிழமை: மும்பை இந்தியன்ஸ் / ராஜஸ்தான் ராயல்ஸ் – மாலை 4 மணி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் / ஆர்சிபி – இரவு 8 மணி

ஏப்ரல் 14, ஞாயிற்றுக்கிழமை: கொல்கத்தா / சிஎஸ்கே – மாலை 4 மணி
ஹைதராபாத் / டெல்லி – இரவு 8 மணி

ஏப்ரல் 15, திங்கட்கிழமை: மும்பை / பெங்களூரு – இரவு 8 மணி.

ஏப்ரல் 16, செவ்வாய்: பஞ்சாப் / ராஜஸ்தான் – இரவு 8 மணி

ஏப்ரல் 17, புதன்: ஹைதராபாத் / சென்னை – இரவு 8 மணி

ஏப்ரல் 18, வியாழன்: டெல்லி / மும்பை – இரவு 8 மணி

ஏப்ரல் 19, வெள்ளி: கொல்கத்தா / பெங்களூரு – இரவு 8 மணி

ஏப்ரல் 20,  சனிக்கிழமை: ராஜஸ்தான் / மும்பை – மாலை 4 மணி டெல்லி / பஞ்சாப் – இரவு 8 மணி

ஏப்ரல் 21, ஞாயிற்றுக்கிழமை: ஹைதராபாத் / கொல்கத்தா – மாலை 4 மணி ஆர்சிபி / சென்னை சூப்பர் கிங்ஸ் – இரவு 8 மணி

ஏப்ரல் 22, திங்கட் கிழமை: ராஜஸ்தான் / டெல்லி – இரவு 8 மணி

ஏப்ரல் 23, செவ்வாய்: சிஎஸ்கே – சன் ரைசர்ஸ் – இரவு 8 மணி

ஏப்ரல் 24, புதன்: ஆர்சிபி / கிங்ஸ் லெவன் – இரவு 8 மணி

ஏப்ரல் 25, வியாழன்: கொல்கத்தா / ராஜஸ்தான் – இரவு 8 மணி

ஏப்ரல் 26, வெள்ளி: சென்னை சூப்பர் கிங்ஸ் / மும்பை இந்தியன்ஸ் – இரவு 8 மணி

ஏப்ரல் 27, சனிக்கிழமை: ராஜஸ்தான் / ஹைதராபாத் – இரவு  8 மணி

ஏப்ரல் 28, ஞாயிறு: டெல்லி / பெங்களூரு – மாலை 4 மணி  கொல்கத்தா / மும்பை – இரவு 8 மணி

ஏப்ரல் 29, திங்கட்கிழமை: ஹைதராபாத் / பஞ்சாப் – இரவு 8 மணி

ஏப்ரல் 30, செவ்வாய்: ஆர்சிபி / ராஜஸ்தான் – இரவு 8 மணி

மே 1, புதன்: சென்னை சூப்பர் கிங்ஸ் / டெல்லி கேப்பிடல்ஸ் – இரவு 8 மணி

மே 2, வியாழன்: மும்பை இந்தியன்ஸ் / சன் ரைசர்ஸ் – இரவு 8 மணி

மே 3, வெள்ளி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் / கொல்கத்தா – இரவு 8 மணி

மே 4, சனிக்கிழமை: டெல்லி / ராஜஸ்தான் – மாலை 4 மணி பெங்களூரு / ஹைதராபாத் – இரவு 8 மணி

மே 5, ஞாயிறு: பஞ்சாப் / சென்னை சூப்பர் கிங்ஸ் – மாலை 4 மணி

மும்பை இந்தியன்ஸ் / கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரவு 8 மணி.

கடந்த 2010, 2011, 2018 ஆகிய ஐபிஎல் தொடர்களில் கோப்பையை வென்ற தோனி தலைமை யிலான சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த முறையும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களம் காணவுள்ளது.

கடந்த ஆண்டு காவிரி விவகாரம் காரணமாக சென்னையில் போட்டி நடைபெற முடியாத நிலையில், இந்த ஆண்டு  முதல் போட்டியே சென்னையில் நடைபெறுவதால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மேலும் விவரங்களை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்… 

Click here for more details – https://www.iplt20.com/schedule 
 

More articles

Latest article