
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் கடைசி நிகழ்ச்சி, ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 17-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரைப்பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது.
விவேக்கின் நடிப்பில் அரண்மனை 3 மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. தவிர, மிர்ச்சி சிவாவுடன் அவர் தொகுத்து வழங்கிய ’LOL: எங்க சிரி பாப்போம்’ எனும் காமெடி ரியாலிட்டி ஷோ அமேசான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
சிரிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் இந்நிகழ்ச்சியின் டாஸ்க். 6 எபிசோடுகளாக ஒளிபரப்பாகவுள்ள இந்த காமெடி ரியாலிட்டி சீரிஸ் வரும் ஆகஸ்டு 27-ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது.
தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. நடிகர்கள் பிரேம்ஜி, சதிஷ், பவர்ஸ்டார் சீனிவாசன், டிவி பிரபலம் புகழ், நடிகை ஆர்த்தி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இதில் கலந்துக் கொண்டுள்ளார்கள்.