அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள விவேகம் படம் கடந்த 24 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியான விவேகம் படம் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 3250 திரையரங்குகளில் வெளியானது, இப்படம் வசூலில் சாதனை படைத்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த படம் குறித்து இரு வேறுபட்ட விமர்சனங்கள் எழுந்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், மீடியாக்களோ, விவேகம் வசூல் 150 கோடியை தாண்டியுள்ளது, பாகுபலியை மிஞ்சி யுள்ளது என்று செய்திகளை வெளியிட்டு அஜீத் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களையும் குழப்பி வழங்கின்றனர்.
தென்னிந்திய தமிழ் படத்திற்கு வியாபார ரீதியாக இவ்வளவு வசூலி கிடைக்குமா அது சாத்தியமா என்பது குறித்து யாரும் யோசிப்பது இல்லை. எதிர்மறையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் விவேகம் இவ்வளவு பெரிய வசூலை வாரி குவிக்க முடியுமா என்பது குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை.
ஆனால், ஒருசிலர் இதுபோன்ற ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்தி, பரபரப்பை உருவாக்கி, பொதுமக்கள் பார்த்தை பார்க்கும் ஆர்வத்தை உருவாக்கி வருகிறார்கள என்பதே உண்மை.
இந்த மாய பிம்பம் கடந்த 5 நாட்களின் வசூல் குறித்த தகவலால் மறைய தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கடந்த 5 நாட்களாக விவேகம் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
கடந்த 5 நாட்களில் சென்னையில் வசூலான விவேகம் திரைப்பட வசூல்
முதல்நாள் வசூல்: 1.21 கோடி,
2வது நாள் வசூல் : 1.51 கோடி,
3வது நாள் வசூல் : 1.52 கோடி
4வது நாள் வசூல் : 1.43 கோடி
5வது நாள் வசூல் : 5.56 லட்சம்
மொத்த வசூல்: 6.23 கோடி மட்டுமே.
இதன் காரணமாக, எந்திரன், கபாலி, தெறி, பைரவா, பாகுபலி போன்ற படங்களின் வசூலை விவேகம் திரைப்படம் முறியடித்து சாதனை படைத்துள்ளது என்று ஒருசிலரால் உருவாக்கப்பட்ட மாய பிம்பம் கலைந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும், சென்னை நகரில் விவேகம் மொத்த வசூல் 1 கோடி 48 லட்சம். இந்த தொகை அடுத்த திங்கட்கிழமை வெறும் 56 லட்சமாக அடிமட்டத்திற்கு குறைந்தது என்று தியேட்டர் வட்டார தகவல்கள் கூறுகின்றன.