ஏ.ஆர். ரஹ்மானின் “ஒன்ஹார்ட்” குறித்து கவிஞர் குட்டி ரேவதி

Must read

ரும் செப்டம்பர் 8 முதல் இந்தியாவின் திரையரங்குகள் எங்கும் வெளியாகும் இசையமைப்பாளர் ஏஆர்ரஹ்மானின் ‘ஒன் ஹார்ட்’ என்ற கான்சர்ட் ஃபிலிமை காணும் வாய்ப்பு கிடைத்தது.

இந்திய வரலாற்றில் இதுமாதிரியான முதல் படம் இதுவே என்று நினைக்கிறேன்.

‘இண்டிமசி’ என்ற கருத்தாக்க அடிப்படையில் தன்னுடைய இசைக்குழுவினருடன் உலகெங்கும் அவர் மேற்கொண்டிருந்த பயணமும், தேர்ந்தெடுத்து பாடிய பாடல்களின் தொகுப்பாகவும் இப்படம் உருவாகியுள்ளது.

உண்மையில், இந்திய இளைஞர்களும், இசை ஆர்வலர்களும் தவறவிடக்கூடாத படம். இந்தியாவின் எந்த மூலையில் ஓர் இசைக்கலைஞன் உருவானாலும், இசையில் மூழ்கித் திளைக்கு ம் இசைப்பித்தர்கள் என்றாலும் ஏஆர்ரஹ்மானின் இசைவாழ்வும் பயணமுமே அவர்களுக்கான உந்துசக்திகளாக அமைந்திருக்கும்.

இந்தப் படத்திலும், கான்சர்ட் வழியாக ஏஆர்ஆர் வழங்கும் இசையின் மேலோங்கிய அனுபவத்தை யும் அதன் தீவிரத்தையும் நம் இதயத்திற்கு நெருக்கமாய் உணரமுடியும். ஏஆர்ஆர் இன்னும் அதிகமாய் நம் இதயத்திற்கு நெருக்கமானவராகிறார்.

உங்கள் வீட்டின் இளஞ்செல்வங்களை எல்லாம் அவசியம் இந்தப்படத்திற்கு அழைத்துச் சென்று விடுங்கள். திரையரங்கில் காணக் கிடைக்கும் வாய்ப்பு முற்றிலும் புதியதோர் அனுபவமாக இருக்கும். முழுக்க முழுக்க இசையை நுகரக் கிடைக்கும் பயன். இன்று இசை மட்டுமே நம் எல்லா வகையான துன்பங்களுக்கும் ஒரே தீர்வு.

More articles

Latest article