சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’.

‘விஸ்வாசம்’ படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை முன்னிட்டு, படக்குழுவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இப்படம் இன்றுடன் (ஏப்ரல் 19) வெளியாகி 100 நாட்களைக் கடந்துள்ளது. இதனால் படக்குழுவினர், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவருமே மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

‘விஸ்வாசம்’ படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.