லட்சுமண் இயக்கும் ஜெயம் ரவியின் 25-வது படம்…!

Must read

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 25-வது படத்தை, லட்சுமண் இயக்கவுள்ளார். இதனை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவுள்ளார்.இதனைத் தொடர்ந்தே ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 24-வது படம் ‘கோமாளி’ .

ஏற்கெனவே லட்சுமண் – ஜெயம் ரவி கூட்டணி ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. தற்போது இது 3-வது படமாக அமைந்துள்ளது .

இதற்கு இமான் இசையமைக்க இப்படத்தை ‘அடங்க மறு’ படத்தின் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவுள்ளார். இவர் ஜெயம் ரவியின் மாமியார் ஆவார்.

More articles

Latest article