கோயம்புத்தூருக்கு விஸ்தாரா விமான நிறுவனத்தின் புதிய விமான சேவை

Must read

கோயம்புத்தூர்

விஸ்தாரா விமான நிறுவனம் கோவைக்கு புதிய சேவைகளை அளிக்க உள்ளது.

கடந்த 20 ஆம் தேதி கோவை விமான நிலையத்தில் இருந்து டில்லிக்குக் கடந்த, 20ம் தேதி முதல் விமானச் சேவையை விஸ்தார நிறுவனம் துவக்கியது. மும்பைக்கு வரும், 27ம் தேதி முதல் தினசரி விமானச் சேவை துவக்கப்பட உள்ளது. 

மேலும் பெங்களூரில் இருந்து கோவைக்கு ஜூன், 3ம் தேதி முதல் தினசரி இரண்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதன் மூலம் விஸ்தாரா விமான சேவைகள் மூலமாக இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்படும், 31வது மாநகரம் கோவை ஆகி உள்ளது.

கோவையில் இருந்து  டில்லிக்கு, 5,899 ரூபாய் முதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதைப் போல் மும்பையில் இருந்து, 4,299 ரூபாய் முதலும், பெங்களூருவில் இருந்து, 3,849 ரூபாய் முதலும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காலை, 11:45 மணிக்கு டில்லியில் இருந்து புறப்படும் விமானம் கோவைக்கு மதியம், 2:40க்கு வந்தடைகிறது. கோவையில் இருந்து மதியம், 3:15 மணிக்கு புறப்படும் விமானம் டில்லிக்கு மாலை, 6:20க்கு சென்றடையும். 

இதைப் போல் மும்பையில் இருந்து காலை, 11:50க்கு புறப்படும் விமானம் கோவைக்கு மதியம், 1:35 மணியளவில் வந்தடையும்.  கோவையில் மதியம், 2:10க்கு புறப்பட்டு மும்பைக்கு மாலை, 4:00 மணிக்கு மும்பை சென்றடையும்

கோவையில் இருந்து இரவு  7.10 மற்றும், 7:25 மணிக்கு தலா ஒரு விமானம் பெங்களூருக்கு செல்கின்றன.  காலை, 8:35 மற்றும் இரவு, 8:55 மணி ஆகிய நேரங்களில் பெங்களூரில் இருந்து கோவைக்கு விமானங்கள் புறப்படுகின்றன.

More articles

Latest article