சிலிகுரி

மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்காவில் இரு சிங்கங்கள் ஒரே கூண்டில் அடைப்பதை எதிர்த்து விஷ்வ இந்து பரிஷத் வழக்கு தொடர்ந்துள்ளது. 

கடந்த 12 ஆம் தேதி அன்று திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்கு இரு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.

ஏற்கனவே அந்த சிங்கங்களில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் முன்னரே பெயர் வைத்துள்ளனர்.

புகழ்பெற்ற முகலாய மன்னரின் பெயர் அக்பர் என்பதம். ராமாயணத்தில் ராமனின் மனைவி பெயர் சீதா என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘சீதா’ மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

வரும் 20 ஆம் தேதி அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

சிங்கங்களுக்கு இடையிலும் மத வேறுபாட்டை விஷ்வ இந்து பரிஷத் எடுத்து வருவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.