இயக்குனர் ராம்குமார் முண்டாசுப்பட்டி தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்களும் இன்று சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

மேலும் அந்த புகைப்படத்தோடு,”எங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்” என தயாரிப்பாளர் சி.வி.குமார் கேட்க, அதை குறிப்பிட்டு நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “முண்டாசுப்பட்டி 2??? எடுறா அந்த கேமராவ” என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படமான முண்டாசுப்பட்டி 2-ம் பாகம் வெளிவருமா என்ற ஆர்வம் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.