சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் ’ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆர்யா ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இமான் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார்.