விஷ்ணு விஷாலுக்கும் ரஜினிக்கும் திருமணமாகி ஆர்யன் என்ற மகன் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக ரஜினிக்கும் விஷ்ணுவுக்கும் 2018-ம் ஆண்டு விவாகரத்து ஆனது.

இதனைத் தொடர்ந்து பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் தனது காதலை 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உறுதி செய்தார்.

செப்டம்பர் 7 ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு, திருமணம் செய்து கொள்ள உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா – நடிகர் விஷ்ணு விஷால் திருமணம் சில வாரங்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்றது. இவர்களின் இந்த திருமண வீடியோவை தற்போது விஷ்ணுவிஷால் வெளியிட்டுள்ளார்.