உங்கள் ராசிக்குரிய பெருமாள் மந்திரம் – பகுதி 3

Must read

உங்கள் ராசிக்குரிய பெருமாள் மந்திரம் – பகுதி 3

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு திருமால் மந்திரம் அமையப் பெற்றிருக்கிறது. இது பலரும் அறியாத விஷயமாக இருந்து வருகிறது. அந்தந்த ராசிக்காரர்கள், அந்தந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால், திருமாலின் ஆசி பரிபூரணமாக கிட்டும். அவரின் அனுகிரகம் கிடைத்தாலே நமக்கு செல்வ வளம் அள்ள அள்ள குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும் அல்லவா?

செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் மகா லக்ஷ்மியை மனைவியாக கொண்டவராய் விளங்குவதால் இந்த மந்திரம் உச்சரிப்பவர்களுக்கு சகல செல்வ சம்பத்துகளும் விரைவில் உண்டாகும் என்பது ஐதீகம். இதில் குறிப்பாக எந்தெந்த ராசிக்காரர்கள்? எந்த மந்திரத்தை உச்சரித்து பயனடையலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்!!!

இன்று மூன்றாம் மூன்று ராசிகளுக்கான மந்திரங்கள்

 

துலாம் ராசி:

வேலை, தொழில், வியாபாரம் என்று எல்லாவிதமான வருமானம் தரும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு தினமும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது சிறப்பான பலனை தரும். இதோ உங்களுக்கான மந்திரம்:

ஓம் த்ரிவிக்ரமாய நம:

 

விருச்சிக ராசி:

உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளுக்கும், குடும்பத்தில் செல்வ வளம் நிறைந்திருக்கவும் வேண்டி தினமும் இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நன்மை உண்டாகும்.

இதோ உங்களுக்கானமந்திரம்:

ஓம் வாமநாய நம:

 

தனுசு ராசி:

இருப்பதை அனுபவிப்பதே பெரிய போராட்டமாக இருந்திருக்கும். உங்களுடைய வாழ்க்கை நீங்கள் எதிர்பார்த்த மாறி அமைத்துக் கொள்ள இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து பலனடையலாம்.இதோ உங்களுக்கான மந்திரம்:

ஓம் ஸ்ரீதராய நம:

 

More articles

Latest article