
விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’. மே 10-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு பின் சில காரணங்களால் மே 11-ம் தேதி வெளியானது.
அதேபோல், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படமும் வெளியீட்டுப் பிரச்சினையில் சிக்கியது.
தனக்குத் தொடர்ச்சியாக சிக்கல்கள் ஏற்பட்டு வருவதைத் தொடர்ந்து தான் நடிக்கும் படங்களை, தானே தயாரிப்பது என முடிவெடுத்துள்ளார் விஷால்.
வெளி நிறுவனங்களின் தயாரிப்புகளில் நடித்து, பட வெளியீட்டு சமயத்தில் சில கோடிகளை விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது. அதைத் திரும்ப வாங்குவதற்குள் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதிருப்பதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக விஷாலுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
Patrikai.com official YouTube Channel