ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து பெரும் வெற்றிபெற்ற படம், “ரோமியோ ஜூலியட்”. இந்தப் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் அடுத்து தயாரிக்கும் படம், “ கத்திசண்டை “.
இந்த படத்தில் நாயகனாக விஷால் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக முதல் முறையாக தமன்னா நடிக்கிறார். இவர்களோடு, சூரி, ஜெகபதிபாபு, சம்பத் ஆகியோரும் நடிக்கிறார்கள். சற்று இடைவெளிக்குப் பிறகு வடிவேலுவும் நடிக்கிறார் என்பது அவசியம் குறிப்பிட வேண்டிய செய்தி.
படத்தைப் பற்றி சொல்லும் இயக்குநர் சுராஜ், “ஆக்ஷன், காமடி இரண்டையும் சரிவிகிதத்தில் தரப்போகிறேன்” என்கிறார் சுருக்கமாக.
மே 2 ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கி தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறப்போகும் இந்தப்படம், தீபாவளி ரிலீஸாம்.