டி.டி.வி.தினகரன் – விஷால் திடீர் சந்திப்பு!

அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைப்பு, சட்டசபையில்நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரிக்கை என்று தமிழ்நாடே பரபரப்பில் இருக்கிறது.  இந்த பரபர நிகழ்வுகளுக்குக் காரணமான டி.டி.வி. தினகரனை சந்தித்து இருக்கிறார் நடிகர் விஷால்.

உடனே ஏதோ அரசில் அதிரடி என்று நினைத்துவிடாதீர்கள்..

விஷாலின் தங்கை ஐஸ்வர்யா. இவருக்கும்  பிரபல உம்மிடி நகைக்கடை அதிபர் குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிருத்திஷுக்கும் வரும் 27-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.

தங்கையின் திருமணத்துக்காக வி.ஐ.பி.க்களுக்கு அழைப்பிதழ் அளித்துவருகிறார் விஷால். தினகரனையும் இதற்காகத்தான் சந்தித்தார்.

சில நாட்களுக்கு முன்  வைகோவை சந்தித்து விஷால் அழைப்பிதழ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தங்கை நிச்சயதார்த்தத்தில் விஷால்.. குடும்பத்தினருடன்..

இந்த நிலையில், தற்போது டி.டி.வி.தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து,  அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்.

தினகரனும் அவசியம் வருவதாக உறுதி அளித்திருக்கிறாராராம்.

திரைப்பட பிரமுகர்கள் மட்டுமின்றி அரசியல் புள்ளிகள் பலருக்கும் அழைப்பிதழ் கொடுத்துவருகிறார் விஷால். அவரது தங்கை திருமணத்துக்கு  பல கட்சி தலைவர்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு ஏதேனும் புதுக்கூட்டணி ஏற்படுமா என்று பார்ப்போம்.
English Summary
vishal-meets-ttvdinakaran.