துப்பறிவாளன் பார்ட் 2-வில் நடிக்கும் விஷால்…!

சுந்தர்.சி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் துருக்கியில் உள்ள கப்படோசியாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,கடந்த 2017ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக துருக்கியில் நடக்கும் சுந்தர்.சி படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்ற இயக்குனர் மிஷ்கின் விஷாலை சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளன.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Mysskin, sundar c, Thupparivalan 2, Turkey, Vishal
-=-