இன்ஸ்டாகிராமில் சேர்ந்த சில நொடிகளில் 7 லட்சம் பின்தொடர்பாளர்களை குவித்த பிரபாஸ்:…..!

‘பாகுபலி’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் ரசிகர்களைப் பெற்றவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். சமூக வலைதளங்களில் இவருக்கான பக்கங்கள் இருந்தாலும் அதிகம் நாட்டம் இல்லாமல் இருந்தவர்.

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இந்தத் தகவல் தெரிந்ததுமே கிட்டத்தட்ட 7.5 லட்சம் பேர் அவரை அங்கு பின் தொடர ஆரம்பித்துவிட்டனர். இன்ஸ்டாகிராமில் இணைந்து இன்னும் ஒரு பதிவைக் கூடப் போடாமலே இத்தனை பின்தொடர்பாளர்கள் . இன்னும் தனது ப்ரொஃபைல் படத்தைக் கூட வைக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.

தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் பொதுவில் காட்டாத பிரபாஸ் இனி இன்ஸ்டாகிராம் மூலமாகவாவது ஏதாவது சில விஷயங்களைச் சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 7 lakhs, followers, Instagram, prabhas
-=-