விஜய் பங்களாவுக்கு பக்கத்து பங்களாவை ரூ. 40 கோடிக்கு வாங்கிய ரஜினி இளைய மருமகன் விசாகன்…!

Must read

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவின் கணவர் விசாகன் தொழில் அதிபர் மட்டும் அல்ல நடிகரும் கூட. அவர் சென்னையில் பங்களா வாங்க திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் நீலாங்கரையில் விஜய்யின் வீட்டிற்கு அருகில் இருக்கும் பங்களா விற்பனைக்கு வந்திருக்கிறது. இது குறித்து அறிந்த விஜய் உடனே விசாகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பங்களா பிடித்துப் போகவே அந்த பங்களாவை ரூ. 40 கோடிக்கு வாங்கியிருக்கிறாராம் விசாகன். சவுந்தர்யாவும், விசாகனும் விரைவில் அந்த பங்களாவில் குடியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி வீட்டிற்கு அருகில் மூத்த மருமகன் தனுஷ் பங்களா கட்டிக் கொண்டிருக்கிறார். பேரன்கள் யாத்ரா, லிங்காவை தன் அருகிலேயே வைத்துக்கொள்ள ரஜினி ஆசைப்பட்டிருக்கிறார். இதையடுத்தே போயஸ் கார்டனில் நிலம் வாங்கி வீடு கட்டி வருகிறார் தனுஷ்.

More articles

Latest article