விருதுநகர்
மோசடி வழக்கில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓரிரு நாட்களில் கைதாவார் எனக் கூறப்படுகிறது.
மூந்தைய அதிமுக அரசில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்து வந்தார். அவர் ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்ததால் அவர் மீது விருதுநகர் காவல்துறையினர் நவம்பர் 15 அன்று வழக்குப் பதிந்தனர்.
இதையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் உள்ளது.
காவல்துறையினர் தனிப்படை அமைத்து டிசம்பர் 18 முதல் ராஜேந்திர பாலாஜியை நாடெங்கும் தேடி வருகின்றனர். இந்நிலையில் விருது நகர் காவல்துறை வட்டாரங்கள் ”தனிப்படை காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியின் மொபைல் போன் சிக்னலை தனிப் படை காவல்துறையினர் கடந்த 2 நாட்களாகத் தீவிரமாகக் கண்காணித்ததில் அவர் வெளிமாநிலத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஓரிரு நாட்களில் அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளன.