சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய விருதுநகர் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்த புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேரில் திமுக நிர்வாகிகள் 2 பேர் உள்பட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். திமுக இளைஞர் நிர்வாகிகளான ஹரிஹரன், சுனைத் அகமது மற்றும் மாடசாமி, பிரவீன் மற்றும் 4 சிறுவா்கள் கைது செய்யப்பட்டனா். முதற்கட்டமாக இவ்வழக்கில் கைதான 8 போ் மீதும் 6 பிரிவுகளில் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் முத்தரசி தலைமையிலான போலீஸாா் விசாரித்து வருகின்றனா்
மாணவர்கள் 4 பேரும் 18வயதுக்கு குறைந்தவர்கள் என்பதால், அவர்கள் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். மற்ற குற்றவாளிகள் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட நால்வர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகிகளான ஹரிஹரன், சுனைத் அகமது மற்றும் மாடசாமி, பிரவீன் ஆகிய நால்வர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.