புனே: அணியில் நம்பர்-3 நிலையில் களமிறங்கி, 10000 ஒருநாள் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை எட்டியுள்ளார் இந்தியக் கேப்டன் விராத் கோலி.
இந்த சாதனையை எட்டிய உலகின் இரண்டாவது வீரர் விராத் கோலிதான். இதற்கு முன்னர், நம்பர்-3 இடத்தில் களமிறங்கி, 10000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை எட்டியவர் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்.
இந்த வகையில், ரிக்கிப் பாண்டிங் மொத்தம் 12662 ஒருநாள் ரன்களை எடுத்துள்ளார். அதேசமயம், அதற்காக அவர் 330 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார். ஆனால், இந்த சாதனையை எட்டுவதற்கு விராத் கோலிக்கு 190 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்த சாதனையை எட்டினார் விராத் கோலி.
இந்தப் பட்டியலில் மூன்றாமிடத்தில் இருப்பவர் இலங்கையின் குமார சங்ககாரா. அவர், மொத்தம் 238 இன்னிங்ஸ்கள் ஆடி, 9747 ரன்களை அடித்துள்ளார்.