லண்டன்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், இந்திய கேப்டன் விராத் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
நேற்றையப் போட்டியில் 37 ரன்களை அவர் எடுத்தபோது இந்த சாதனை எட்டப்பட்டது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலேயே அவர் இதை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோலி சதமடிக்காமல் அவுட்டாகிவிட்டார்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த சாதனையை 417 இன்னிங்ஸ்களில் செய்துள்ளார் கோலி. சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாராவுக்கு இந்த சாதனையை செய்ய 453 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டன. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 464 இன்னிங்ஸ்களில் இச்சாதனையை செய்தார்.
இச்சாதனையை நிகழ்த்தும் இந்தியாவின் 3வது வீரராகவும், உலகளவில் 12வது வீரராகவும் உருவாகியுள்ளார் விராத் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
223 ஒருநாள் போட்டிகள், 131 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 62 டி-20 போட்டிகளில் இந்த ரன்களை எடுத்துள்ளார் விராத் கோலி.