இந்தியா அபார வெற்றி: பந்தாடிய பாண்டியா; பதம் பார்த்த கோலி..!

Must read

நேற்று நடந்த ஒரு நாள் போட்டி இந்தியாவிற்கு 900-வது போட்டி என்பதால், 900 கிராமிலான தங்கநாணயத்தால், ‘டாஸ்’ போடப்பட்டது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இதனால், முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள், பாண்டியா, உமேஷ் ஆகியோரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஒற்றை இலக்க எண்ணுடன் களத்தை விட்டு வெளியேறினார். முதல் முறையாக சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா, ‘குப்தில், கோரே ஆண்டர்சன், ரோஞ்சி’ என மூன்று அதிரடி பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பி், அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார்.

kohi18.4 ஓவரில் வெறும் 65/7 என தடுமாறியது நியூசிலாந்து. ஆனால், அடுத்து களம் இறங்கிய டிம் சவுத்தி, நியுசிலாந்து அணிக்கு கவுரவமான ஸ்கோரை பெற்றுதந்தார். 45 பந்தில் 55 ரன் எடுத்தார். ஒன்பதாவது விக்கெட்டுக்கு லாதம் – சவுத்தீ இணைந்து 71 ரன்களை சேர்த்தனர். லாதம் 98 பந்தில் 79 ரன் அடித்து நாட் அவுட்டாக இருந்தார்.

பின்னர், களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரஹானே, வழக்கத்திற்கு மாறாக அடித்து ஆட துவங்கினர். பிரேஸ்வெல்லின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார் ரஹானே. ரோகித் 14 ரன்னும், ரஹானே 33 ரன்னும் எடுத்தனர். சேஸிங் என்றாலே வெறி பிடித்து ஆடும் கோலி, களத்தில் இறங்கியதும் நியூசிலாந்து வீரர்களின் பந்துகளை பதம் பார்த்தார். விக்கெட்டுகள் சரிந்தாலும் கோலி, கிடைக்கும் கேப்பில் எல்லாம் பவுண்டரியாக விளாசித்தள்ளினார். தோனியை ரன் அவுட்டாக்கி விட்டாலும், இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார் கோலி. 81 பந்தில் 85 ரன்கள் கோலி விளாசியதில் 33.1 ஓவரிலேயே 194 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது இந்தியா.

More articles

Latest article