அகமதாபாத்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கபடி போட்டியில், ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும், அர்ஜென்டினாவும் நேற்று முன்தினம் மோதிக்கொண்டன. அர்ஜெண்டினாவை, இந்திய கபடி அணி 74-20 என்ற புள்ளி கணக்கில் சுழற்றி வீசியது.

india-argentina-preview-1476510980-800உலகக்கோப்பை போட்டியில் 54 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதல்முறை. அஜய் தாகூர், ராகுல் சவுத்ரி ஆகியோர் இணைந்து 25 ரெய்டு புள்ளிகளை பெற்று, இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர். இந்தியா அணியினரின், சூறாவளி தாக்குதலை சமாளிக்கமுடியாத அர்ஜென்டின கபடி அணியினர், படுதோல்வியை சந்தித்தனர்.

முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்தடுத்து மூன்று அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர். இந்தியா அணி மொத்தம் 16 புள்ளியுடன் ‘ஏ’ பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய கபடி அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.