டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

Must read

துபாய்: 
விராட் கோலி, டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு – மும்பை இண்டியன்ஸ் அணிகள் இடையே துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியில்,  டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்தார். இந்த போட்டியில் விராட் கோலி 51 ரன்கள் எடுத்தார்.
மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் 446 போட்டிகளில் 36,94 ஸ்ட்ரைக் ரேட்டில் 14,261 ரன்கள் எடுத்து அதிக டி 20 ரன்கள் எடுத்த பட்டியலில் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். அவர் 22 சதங்கள் மற்றும் 87 அரைசதங்களை அடித்துள்ளார்.
இதற்கிடையில் கோலி 311 போட்டிகளில் 133.95 ஸ்ட்ரைக் ரேட்டில் 9929 ரன்கள் எடுத்தார். 2007 மற்றும் 2021 க்கு இடையில், அவர் 5 சதங்கள் மற்றும் 72 அரைசதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article