பெட்ரோல் தட்டுப்பாடு :  இங்கிலாந்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Must read

ண்டன்

டும் பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக இங்கிலாந்தில் ஒவ்வொரு பங்கிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

கடந்த சில நாட்களாக இங்கிலாந்து நாட்டில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  பல இடங்களில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இருப்பு இல்லை என்னும் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில பங்குகளில் மட்டுமே பெட்ரோல் இருப்பு உள்ளது.

இதற்கு கொரோனா மற்றும் பிரக்ஸிட் ஒப்பந்தம் காரணம் எனக் கூறப்படுகிறது.  இந்த இரு காரணங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் சரியான நேரத்தில் வந்து சேருவதில்லை.  இதனால் இங்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  எனவே ஒரு சில பெட்ரோல் பங்குகளில் மட்டும் இருப்பு உள்ளது.

இதையொட்டி அந்த பங்குகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் எரிபொருள் நிரப்பக் காத்திருக்கின்றன.   ஆனால் இங்கிலாந்து அரசு தங்கள் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.

More articles

Latest article