மணிலா:
பிலிப்பைன்ஸ் சிறை தப்பிக்க முயன்ற  4 கைதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பிலிப்பைன்ஸின் சூரிகாவோ டெல் சுர் மாகாணத்தில் சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்க முயசி செய்தனர். இவர்களைத் தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற 4 கைதிகள் கொல்லப்பட்டனர்.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்குச் சற்று முன் துப்பாக்கிச் சூடு நடந்தது, 11-க்கும் மேற்பட்ட கைதிகள் சமையலறையில் காலை உணவு செய்யும் சிறை ஊழியர்களைக் கடத்திச் செல்ல முயற்சி செய்தனர் என்று சிறை மேலாண்மை மற்றும் தண்டனை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.