மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

Must read

ண்டன்

ங்கிலாந்து ஆல்ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் வீரரான மொயின் அலி ஒரு ஆல் ரவுண்டர் ஆவார்.  தற்போது 34 வயதாகும் அவர் இது வரை 64 டெஸ்ட் பந்தயங்களில் ஆடி உள்ளார்.  மேலும் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எமிரேட்ஸில் மொயின் அலி எமிரேட்ஸில் விளையாடி வருகிறார்.   இவர் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகள் படைத்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் அவர் 4 டெஸ்ட் சதங்களை எடுத்துள்ளார்.  தவிர 2017 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 25 விக்கட்டுகள் வீழ்த்தி உள்ளார்.  மேலும் கடந்த 2018-19 ஆம் வருடம் நடந்த இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 6 டெஸ்ட் பந்தயங்களில் 32 விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

இந்நிலையில் அவர் டெஸ்ட் பந்தயங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவை அவர் ஏற்கனவே இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிச் சில்வர் உட்,, அணித்தலைவர் ஜோ ரூட் ஆகியோரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.    டெஸ்ட் பந்தயக்களில் பங்கு பெற்றால் வீட்டை விட்டு நீண்டகாலம் வெளிநாடுகளில் தங்க வேண்டி இருக்கும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

More articles

Latest article