மும்பை: புனே டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கிடைத்த வெற்றியை அடுத்து, உலகின் மூன்றாவது வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் மற்றும் இந்தியாவின் முதல் சிறந்த டெஸ்ட் கேப்டன் என்ற பெருமைகளைப் பெற்றுள்ளார் விராத் கோலி.

இதுவரை மொத்தம் 50 டெஸ்ட்டுகளுக்கு தலைமையேற்று, மகேந்திரசிங் தோனிக்கு அடுத்து, 50 டெஸ்ட்டுகளில் இந்திய அணியை வழிநடத்திச் சென்ற கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

உலகளவில் சிறந்த டெஸ்ட் கேப்டன்கள் என்ற வரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாஹ் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் உள்ளனர். ஸ்டீவ் வாஹ் 50 டெஸ்ட் போட்டிகளில் 37 வெற்றிகளையும், ரிக்கிப் பாண்டிங் 50 டெஸ்ட் போட்டிகளில் 35 வெற்றிகளையும் பெற்றுத் தந்துள்ளனர்.

விராத் கோலி 50 டெஸ்ட் போட்டிகளில் அணிக்கு தலைமையேற்று பெற்ற வெற்றிகளின் எண்ணிக்கை 30. வெற்றி விகிதம் 60%. இந்த 50ல் 10 தோல்விகளும், 10 டிராக்களும் அடக்கம்.

புனே டெஸ்ட் போட்டியில் இவர் அடித்த 254 ரன்கள்தான், டெஸ்ட் போட்டியில் இவர் அடித்த அதிகபட்ச ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.