ரிஷிகேஷ்
ரிஷிகேஷ் நகர கங்கை நதியில் வெளிநாட்டவர் கூட்டம் பிகினி உடையுடன் குளிக்கும் காணொளி விரைவாகி உள்ளது
ரிஷிகேஷ் நகர் உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் அருகில் அமைந்துள்ளது. இது இந்துக்களின் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்கு ஓடும் கங்கை நதியில் நீராட இந்தியா முழுவதும் இருந்து சாதுக்கள், முனிவர்கள், பக்தர்கள் பலர் வருகின்றனர்.
ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியில் பிகினி உடையில் வெளிநாட்டினர் நீராடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிமாலயன் இந்து என்ற பெயரிலான எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
அந்த பதிவில்,
“ரிஷிகேஷ் நகரம் இப்போது மதம், ஆன்மிகம் மற்றும் யோகாவின் நகரமாக இல்லை. கோவா போன்று ஆகிவிட்டது. ரிஷிகேஷில் ஏன் இதுபோன்ற போதை விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் ஜாம்பி கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது? புனித பூமி என்பது இதுதானா? இந்தப் புனித நகரத்தை அவர்கள் அழிக்கும் முன் ஏதாவது செய்ய வேண்டும்”
என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேறொரு வீடியோ பதிவில், ‘
“புனித கங்கையைக் கோவா கடற்கரையாக மாற்றிய புஷ்கர் தாமிக்கு (முதல்வர்) நன்றி. இப்படிப்பட்ட நிகழ்வுகள் இப்போது ரிஷிகேஷில் நடக்கின்றன. விரைவில் இந்த நகரம் மினி பாங்காக் ஆகிவிடும்”
என முதல்வர் புஷ்கர்சிங் தாமியை டேக் செய்துள்ளனர்.
நமது வாசகர்களுக்காக அந்த வீடியோ இதோ