டில்லி

ன்று 6 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது.

நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 19 ஆம் தேதியும், 2 ஆம் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதியும் நடைபெற்றது., வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதி கடைசி கட்டமான 7 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

வரும் 25ம் தேதி 6 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதில் டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகள், அரியானா, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார், மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் 57 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.

இன்று 6 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது வரும் 6 ஆம் தேதி. வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் ஆகும். 7 ஆம் தேதி வேட்புமனு சரிபார்ப்பு நடைபெற்று வேட்புமனுக்களைத் திரும்பப்பெற 9ம் தேதி கடைசி நாள் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.