காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாபதிபதியான, மகா பெரியவா  என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் மறைந்த சந்திரசேகரேந்திர சுவாமிகள்,  அவர் நடமாடும் காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஜகத்குருவாக இருந்து இறைத் தொண்டாற்றியவர் சந்திரசேக சுவாமிகள் 1994 ஆம் ஆண்டு சித்தியடைந்தார் அவரின் ஆராதனை ஆண்டுதோறும் சிறப்பாக காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுமார் 87 ஆண்டுகள் இறைப்பணி செய்தவர்,  தன் நற்செயல்களாலும், இறைப்பணிகளாலும் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தைக் கவர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில், அவரது நினைவிடத்தில் நடைபெற்ற பூஜையின்போது, அவர் திடீரென நடந்து செல்வது போன்ற காட்சி, பக்தர் ஒருவர் எடுத்த மொபைல் வீடியோவில் பதிவாகி உள்ளது.  இந்த விடியோ வைரலாகி வருகிறது..

 

[youtube-feed feed=1]