சென்னை:

விழுப்புரம் நகர அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலு ஒரு மாணவரோடு சரி சமமாக மண்டியிட்டு கைகூப்பி இருந்த போட்டோ ஒன்று கடந்த மாதம் சமூக வலை தளங்களில் வைரலானது. பள்ளிக்கு ஒழுங்காக வரும்படி மாணவர்களை அவர் கேட்டுக் கொண்ட செய்தி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சமயம் ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் ஒருவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இது தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்டுத்தியிருந்த சமயத்தில் தலைமை ஆசிரியர் பாலுவின் புகைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜனவரி 12ம் தேதி எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் பாலுவுடன் இருப்பவர் பிளஸ் 2 மாணவர். இந்த பள்ளியில் ஆயிரம் ம £ணவர்கள் பயில்கின்றனர்.

இது தலைமை ஆசிரியர் குறித்து பாலு கூறுகையில், ‘‘ அந்த மாணவர் ஒழுங்காக பள்ளிக்கு வராமல் இருந்தார். கல்வி பயில வருமாறு நான் அவரிடம் மன்றாடி கேட்டுக் கொண்டேன். இதன் மூலம் மாணவரின் எதிர்காலம் வளர்ச்சி ஏற்படும் என்பதால் அவ்வாறு செய்தேன்’’ என்றார். இது முதல் முறை கிடையாது. மாணவர்களிடம் ஒழுக்கத்தை ஏற்படுத்த இது போன்ற செயலை அவர் பல முறை கடைபிடித்துள்ளார்.

பாலு மேலும் கூறுகையில்,‘‘ நன்றாக படிக்க வலியுறுத்தியும், ஒழுங்காக பள்ளிக்கு வர வலியுறுத்தியும் தனிப்பட்ட முறையில் 150க்கும் மேற்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்றுள்ளேன். வார இறுதி நாட்களில் அருகில் உள்ள கிராமங்களுக்கு பயணம் செய்வேன். அவர்களை சமாதான முறையில் பேசி தான் பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன். கோபத்துடனும், அதிகாரத்துடனும் சொன்னால் யாரும் கேட்கமாட்டார்கள்.

பெரும்பாலான மாணவர்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கல்வி பயில யாரும் ஊக்குவிப்பது கிடையாது. பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை மாணவர்கள். அவர்களை பள்ளிக்கு வரவைப்பது தான் எனது நோக்கம். பொதுவான ஊக்குவிப்பு மட்டும் போதாது. அவர்களது வீட்டுக்கு நேரடியாக சென்று கைகளை கட்டிக் கொள்வேன். அனைவரும் சமம் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு செய்வேன். படித்தால் பெற்றோரை விட சிறந்த வாழ்க்கையை என்னால் ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்று உறுதியளிப்பேன்’’ என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘அரசு பொதுத் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும்?, எந்த கல்லூரியில் சேர எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்பது குறித்து அவர்களுக்கு ஒரு வரைபடம் தயாரித்து கொடுத்துள்ளேன். நான் அதிகாரத்துடன் செய்தால் அவர்கள் என்னிடம் தவறாக நடந்து கொள்வார்கள். அதனால் கைகளை கட்டி மன்றாடி கேட்டுக் கொள்வேன். இது சமயங்களில் மாணவர்களு க்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். ஆனால், இது அவர்களின் நல்லதுக்கு தான் செய்கிறேன். உதவி செய்வதில் எனக்கு அதிக விருப்பம்.

நானும் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன். அரசு பள்ளியில் பயின்றேன். அடுத்த தலைமுறைக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்க உதவி செய்வது எனது நோக்கம். இந்த சண்டையில் ஈகோ கிடையாது. அனைத்து ஆசிரியர்களும் கைகளை கட்ட வேண்டும் என்று நான் கூறமாட்டேன். எனினும் நண்பரை போல் நாம் நட ந்துகொண்டால் மாணவர்களும், பெற்றோரும் ஆசிரியர்களை மதிப்பார்கள்.

ஒழுங்கீன செயல்களை எவ்விதத்திலும் ஏற்க முடியாது. அதே சமயம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு க டுமையான தண்டனைகளை வழங்க கூடாது. மாணவர்களை ஜாதி, மத ரீதியாக திட்டக் கூடாது. இதை ஒரு ஆசிரியர் செய்தால் அது பெரிய தவறாகும். எனது செயல்பாட்டால் கடந்த ஆண்டு மாணவர்களின் வருகை 10 சதவீதம் அதிகரித்தது. ஆனால் இது தொடருமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்’’ என்றார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் ஆசிரியர்கள் துன்புறுத்தல் காரணமாக அதிகளவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.