ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் லாகின்.

பிரவீன், வினோத் கிஷன், ப்ரீத்தி நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் லாகின் செய்வதால் ஏற்படும் விளைவு, த்ரில்லர் பாணியில் சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, விபின் இசையமைக்கிறார். ராம் கிஷன் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதும் இந்த படத்தை ராஜேஷ் வீரமணி இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ‘நோ மட்டும் சொல்லாத’ என்கிற பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. இப்படி டெக்னாலஜியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் விரைவில் படக்குழுவினரால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.