திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில்

திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 113ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் கொரடாச்சேரியில் இருந்து 7 கி.மி. தொலைவில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மி. இத்தலம் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சம்பந்தர் அடியவரோடு ஓடம் ஏறி அதனைப் பதிகம் பாடிச் செலுத்தி மறுகரை அடைந்தார் என்பது தொன்நம்பிக்கை.இங்கு ஆற்றின் எதிர்க்கரையில் திருஞானசம்பந்தருக்கு திருக்கோயில் அமைந்துள்ளது.
பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்
சுவாமி விபுலானந்தர் இயற்றிய யாழ் நூல் அரங்கேறிய திருத்தலமும் இதுவே.
வழிபட்டோர்
விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேடன், இடைக்காடர், வரகுண பாண்டியன், கோச்செங்கட்சோழன், பிருகு முனிவர், காசிப முனிவர், கண்வ முனிவர், அகத்திய முனிவர், வசிட்ட முனிவர், வாமதேவர்
வெட்டாறு
இது முள்ளியாறு என்றும் அகத்திய காவேரி என்றும் அழைக்கப்படும். கோயிலுக்கு மேற்கே இந்த ஆறு ஓடுகிறது. திருஞானசம்பந்தர் பதிகம் பாடி ஓடஞ்செலுத்தியது. துலா மாதத்தில் அமாவாசை உதித்த முதல் பாதத்தில் நீராடி வழிபட்டால் வேண்டும் சித்திகளையும், வலிமையையும் பெறுவர். இது ஓடம்போக்கி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.
விழா
ஓட விழா, ஐப்பசி அமாவாசையில் நடத்தப்பெறுகிறது. இவ்விழா இத்திருகோயிலில் நடைபெறும் சிறப்பான விழாவாகும்.
Patrikai.com official YouTube Channel