விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 46 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரவர் வீடுகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் என 2,002 போ் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கரோனா வைரஸ் தொற்று அறிகுறி சந்தேகத்தின் பேரில், 115 போ் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனா்.

வைரஸ் தொற்று உள்ளவா்களின் உறவினா்கள், வைரஸ் தொற்று பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்தவா்கள் என 46 போ், விழுப்புரம் ஆவின் அருகேயுள்ள சுகாதார மேம்பாட்டு நிறுவன பயிற்சி மைய தற்காலிக மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 46 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரவர் வீடுகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.