கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் விவேக்

விழுப்புரம்,

முறையற்ற காதல் காரணமாக தாலி கட்டிய கணவனை, காதலன் மூலம் கொலை செய்து புதைத்தது தற்போது தெரியவந்துள்ளது.

விழுப்புரம் அருகே தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்று புதியதாக தொடங்கப்பட்டது. இந்த ஆலை பகுதியில் வடமாநில தொழிலதிபர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது,

மேற்கு வங்காளத்தை பூர்வீகமாக கொண்டவர்   விவேக் பிரசாத். தொழில் அதிபர். இவருக்கு விழுப்புரம் அருகே தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை உள்ளது.  இவருக்கு கொல்கத்தாவிலும் வியாபாரம் உள்ளது.

இதன் காரணமாக அவர் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி பகுதிக்கு குடிபெயந்துள்ளார். இந்நிலை யில் கடந்த 1ம் தேதி விவேக் பிரசாத்தை காணவில்லை என்றும், பல இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்று அவரது மனைவி ஜெயந்தி கடந்த 3ம் தேதி ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையின்போது, விவேக் பிரசாத்தின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அவர் கடைசியாக அவரது சூப்பர்வைசர் சேக்பாபுவிடம் பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சேக்பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் விவேக் பிரசாத் தன்னை சந்திக்க வரவில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையை கட்டிய, கட்டிட மேஸ்திரி என்வரை கண்காணித்த தில் துப்பு துலங்கியது.

விவேக்கின் மனைவி ஜெயந்தி

அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் மேஸ்திரி கணபதி கூறியதாவது,

தொழில்அதிபர் விவேக் பிரசாத் காணாமல் போன  மறுநாள் இரவு, சூப்பர்வைசர் சேக் பாபு தன்னை அழைத்ததாகவும், அப்போது,  விவேக் பிரசாத்தை தான்  அடித்து கொலை செய்து விட்டதாகவும் அதனை புதைக்க குழி தோண்டும் படியும் கூறியதாக கூறியுள்ளார்.

அந்த குழி, கழிவு நீர் தேங்குவதற்காக தோண்டி வைத்திருந்ததாகவும்,  அதனுள் விவேக் பிரசாத் உடலை  மண் போட்டு மூடி விட்டதாகவும் காவல்துறையினரிடம் கூறினார் கணபதி.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு  காவல்துறையினர்  பொக்லைன் உதவியுடன் அந்த கழிவு நீர் தொட்டியை தோண்டியபோது உள்ளே அழுகிய நிலையில் விவேக் பிரசாத்தின் சடலம் மீட்கப்பட்டது.

அதை, விவேக் பிரசாத்தின் மனைவி ஜெயந்தி மூலம் உறுதி செய்யப்பட்டது, அதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த கொலை குறித்து விசாரணை நடத்திய போலீசார் சூப்பர்வைசர் தலைமறைவாக இருந்த சேக் பாபுவை கைது செய்தனர்.

விசாரணையில், இந்த கொலைக்கு மூல காரணம் தொழில்அதிபர் விவேக் பிரசாத்தின் மனைவி என்பது தெரிய வந்தது. அவரிடம் நடைபெற்ற விசாரணையில், கொல்கத்தாவில் தொழில் செய்யும் போது விவேக் பிரசாத்தின் மனைவிக்கும், வேறொரு நபருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனை தவிர்க்கவே புதுச்சேரிக்கு குடி பெயர்ந்துள்ளது தெரிய வந்தது.

இந்நிலையில்தான் புதிதாக வேலைக்கு சேர்ந்த, சூப்பர்வைசர் சேக்பாபு கணவன் மனைவிக்கு இடையே நடைபெறும் உரையாடல்களை கவனித்து, தொடர்ந்து ஜெயந்திக்கு ஆதரவு கூறுவது போல் நடித்து அவரை தனது வளையில் வீழ்த்தியுள்ளார்.

இதையடுத்து இருவரும் இடையே கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இது பிரசாத்துக்கு தெரிய வந்ததும் மீண்டும் பிரச்சினை வெடித்துள்ளது.

இதையடுத்து கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியான விவேக் பிரசாத்தை தீர்த்து கட்டினால் நிம்மதியாக வாழலாம் என்ற ஜெயந்தி ஆசை காட்ட அதன்படி புதிதாக கட்டிக்கொண்டி ருக்கும் குடி நீர் தொழிற்சாலைக்கு வரவைத்த சேக்பாபு அவரை அடித்து கொலை செய்து சடலத்தை தார்பாயில் சுருட்டி புதைத்து சென்றுள்ளான் என்கிறது காவல்துறை.

இதையடுத்து விவேக் பிரசாத்தை கொலை செய்ய தூண்டிய அவரது மனைவியையும் காவல்துறை யினர் கைது செய்தனர்.

பெண்ணின் முறையற்ற  காதல், காமம் காரணமாக தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் ஜெயந்தி மற்றும் சேக்.