சென்னை,

பொதுமக்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள விஸ்வநாதன் கூறியுள்ளார்.

சென்னை மாநகர புதிய கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதனை நியமித்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் இன்று கமிஷனர் அலுவலகம் வந்து கமிஷனராக பொறுப்பேற்றார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதை தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, அவர் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய கமிஷனராக கரன்சின்ஹா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று கரன் சின்ஹாவை மாற்றி புதிய மாநகர கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதனை நியமித்து உள்ளனது.

அதைத்தொடர்ந்து வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏ.கே.விசுவநாதன் பொறுப்பேற்றார்.  அவரிடம் முன்னாள் கமிஷனர் கரன்சின்ஹா பொறுப்புகளை ஒப்படைத்தார்.

புதிய கமிஷனராக பொறுப்பேற்ற விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பொதுமக்கள் காவல்துறையை  சுலபமாக அணுகி புகார் அளிக்கலாம் என்றும்  பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து கோட்டைக்கு சென்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.